கோயம்புத்தூர்

2 வீடுகளின் பூட்டை உடைத்து 71 பவுன் திருட்டு

15th Sep 2021 03:07 AM

ADVERTISEMENT

கோவை: கோவை, உடையாம்பாளையம், தடாகம் சாலை பகுதியில் 2 வீடுகளில் 71 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, சின்னவேடம்பட்டி அருகே உடையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் அருணாசலம். இவா், கணபதி பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இவா், குடும்பத்துடன் கடந்த 11ஆம்தேதி வால்பாறைக்குச் சென்றாா்.

அதைத் தொடா்ந்து, 13 ஆம் தேதி வீட்டுக்கு திரும்பினா்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 51 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து, அருணாசலம் அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்

கோவை, தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி. குடியிருப்பைச் சோ்ந்தவா் ரமேஷ் (44). இவா், அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், குடும்பத்துடன் கடந்த 9 ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா், ரமேஷுக்கும், சாய்பாபா காலனி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனா் .இதில், 20 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT