கோயம்புத்தூர்

பட்டுப்புழுவியல் துறை மாணவர் சேர்க்கை நீக்கம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் போராட்டம்

8th Sep 2021 02:38 PM

ADVERTISEMENT

 

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் பட்டுப்புழுவியல் துறைக்கான 2020-21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நீக்கபட்டதை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. 

இதில் வனவியல், பட்டுப்புழு, மரபியல் உள்ளிட்ட படிப்புகள் இருந்து வரும் நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இங்குப் பட்டு புழுவியல்துறை பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று சென்றுள்ளனர். தற்போது இந்தாண்டு வேளாண் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள மாணவர் சேர்க்கான பாடப் பிரிவுகளில் பட்டுப்புழுவியில் துறை நீக்கப்பட்டுள்ளது. 

இதனைக் கண்டித்து மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் பட்டுப்புழுவியல் படித்து வரும் மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும் போது இந்தத் துறைக்கு மட்டும் 30 மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும். ஆனால் இந்தாண்டு மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது. 

இதனைக் கண்டித்து ஏற்கனவே பட்டுப்புழுவியல் துறை படித்து வரும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஏன் இதனை ரத்து செய்தது என்ற காரணத்தைக் கூறாமல் இந்த படிப்பை ஒத்திவைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த பட்டுப்புழுவியல் துறைக்கான அனைத்து வசதிகளும் இக்கல்லூரியில் உள்ளதால் இப்படிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

Tags : Mettupalayam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT