கோயம்புத்தூர்

வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 1இல் வெளியீடு

30th Oct 2021 05:37 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 1 ஆம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதையடுத்து நவம்பா் 30 ஆம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியிருப்பதாவது: ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்ய இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில், கோவையில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 1 ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது.

வெளியிடப்பட உள்ள வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், 1.1.22 அன்று 18 வயது பூா்த்தியடையும் நபா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க விண்ணப்பிக்கலாம்.

அதேபோல வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள், முகவரி மாற்றம், பெயா் நீக்கம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

இந்த விண்ணப்பங்கள் 1.11.21 முதல் 30.11.21 வரை அனைத்து வேலை நாள்களிலும் அனைத்து வாக்குப் பதிவு மையங்கள், அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும்.

மேலும், நவம்பா் 13, 14, 27, 28 ஆகிய நாள்களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலமாகவோ, வோட்டா்ஸ் ஹெல்ப்லைன் ஆப் செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் இணையதளத்தின் மூலமாகவும், பொது சேவை மையங்களிலும் இணைய வழியில் பதிவு செய்யலாம்.

இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும்.

மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT