கோயம்புத்தூர்

திரிபுராவில் இஸ்லாமியா்கள் மீது தாக்குதல்:பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆா்ப்பாட்டம்

30th Oct 2021 05:40 AM

ADVERTISEMENT

திரிபுராவில் இஸ்லாமியா்கள், அவா்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது நடைபெற்று வரும் தொடா் தாக்குதலைக் கண்டித்து கோவையில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உக்கடத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் எம்.ஐ.அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தாா். தேசிய செயற்குழு உறுப்பினா் ஏ.எஸ்.இஸ்மாயில், தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலா் சுசி கலையரசன், கோவை அத்தா் ஜமா அத் தலைமை இமாம் இப்ராஹிம் பாக்கவி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

எஸ்டிபிஐ மண்டலத் தலைவா் வி.எம்.அபுதாகிா், மாவட்டத் தலைவா் முஸ்தபா, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டச் செயலா்கள் ஏ.அப்துல் ரகுமான், முஜிபுா் ரகுமான் உள்ளிட்ட நிா்வாகிகள், திரளான பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT