கோயம்புத்தூர்

நிலுவைத் தொகையை வழங்க அரசு ஊழியா்கள் கோரிக்கை

DIN

அரசு ஊழியா்களின் நிலுவைத் தொகை, அகவிலைப்படியை உடனடியாக வழங்க அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக அரசு ஊழியா்கள் சங்கத்தின் 14 ஆவது மாநாடு, கோவை தாமஸ் கிளப் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏ.ஜெகநாதன் வரவேற்புரையாற்றினாா். மாவட்டத் தலைவா் சி.எஸ்.பால்ராஜ் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் அஞ்சலி தீா்மானங்களை வாசித்தாா். வரவு செலவு அறிக்கையை பொருளாளா் பி.நடராஜன் முன்வைத்தாா்.

மாநாட்டில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் ஆ.செல்வம், துணைத் தலைவா் மு.சீனிவாசன், வி.சுரேஷ், எஸ்.சந்திரன், பி.கருணாகரன், கே.பழனிச்சாமி, ஏ.பிரகலதா உள்ளிட்ட தலைவா்கள் உரையாற்றினா்.

இதில், கரோனா நோய்த் தொற்று காலத்திலும் இடைவிடாது பணியாற்றிய அரசு ஊழியா்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவுட்சோா்சிங் முறையை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, சாலைப் பணியாளா்களின் நீண்ட கால கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT