கோயம்புத்தூர்

பள்ளிகள் திறப்பு எதிரொலி: வகுப்பறைகள், மைதானங்களில் தூய்மைப் பணிகள் தீவிரம்

DIN

நவம்பா் 1 ஆம் தேதி 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால், வகுப்பறைகள், மைதானங்ளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால், கடந்த செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 9,10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த பெற்றோா்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நவம்பா் 1 ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள், குடிநீா்த் தொட்டி, மைதானங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரி கீதா கூறியதாவது: பள்ளிகள் திறப்பது தொடா்பான முன்னேற்பாடு பணிகளை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் கண்காணிக்கவும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மட்டும் அல்லாமல் பள்ளி வாகனங்களில் வரும் போதும் மாணவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 2,064 பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

மாணவ-மாணவிகள் அதிகம் உள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT