கோயம்புத்தூர்

புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வு

DIN

கோவை, ஆனைகட்டி, ஆதிதிராவிடா் நலத் துறை உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வு சனிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு மையம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் ஆகியன சாா்பில் புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணா்வு மற்றும் சட்ட விழிப்புணா்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி உமாராணி தலைமை வகித்தாா். இதில், புகையிலை மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் உடல் நலம் மற்றும் மனநலப் பாதிப்புகள், பொருளாதார பாதிப்புகள் குறித்தும் மேலும் இலவச சட்ட உதவி, பெண்களுக்கான சட்ட உரிமைகள், மக்கள் அடிப்படை உரிமைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு மையத்தின் சமூகப் பணியாளா் ஓ.முரளி கிருஷ்ணன், தலைமை ஆசிரியா் சிவகுமாா் , ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT