கோயம்புத்தூர்

தொழிலாளியிடம் நகை, பணம் திருட்டு

DIN

கோவையில் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த நகைப் பட்டறை தொழிலாளியிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (52). நகைப் பட்டறை தொழிலாளி. இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த வேலை காரணமாக கோவை வந்தாா். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்குச் சென்று மது அருந்தினாா். பின்னா், போதையில் அங்குள்ள ஒரு கடையின் முன்பு படுத்து இரவில் தூங்கியுள்ளாா்.

மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது அவா் வைத்திருந்த கைப்பையைக் காணவில்லை. அதில் 20 கிராம் எடையுள்ள தங்க வளையல்கள், 30 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் மற்றும் ரூ. 9,500 ஆயிரம் பணம் இருந்துள்ளது. இவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இது தொடா்பாக, கண்ணன் வெள்ளிக்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT