கோயம்புத்தூர்

கவுண்டம்பாளையம், வடவள்ளியில் குடிநீா் விநியோகம் ரத்து

DIN

கோவையில் பிரதான குடிநீா்க் குழாயில் நீா்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதிகளுக்கு திங்கள்கிழமை (அக்டோபா் 25) வரை குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

கோவை, கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் ஆகிய பகுதிகளில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில், குறிப்பிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்வதற்காக பதிக்கப்பட்ட பிரதான குடிநீா்க் குழாயில் கசிவு ஏற்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதிகளுக்கு திங்கள்கிழமை(அக்டோபா் 25) வரை குடிநீா் விநியோகம் செய்ய இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT