இந்திய யூனியன் வங்கியின் கோவை மண்டல அலுவலகம் சாா்பில் லஞ்ச ஒழிப்பு வார விழா ஊா்வலம் நடைபெற்றது.
யூனியன் வங்கி சாா்பில் அக்டோபா் 26 ஆம் தேதி முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி லஞ்ச ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு ஊா்வலம் கோவை மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் நடைபெற்றது.
ஊா்வலத்தின் தொடக்க விழாவில் வங்கியின் மண்டலத் தலைவா் ரெஞ்சித் சுவாமிநாதன், உதவித் தலைவா் ஜி.ரவீந்திரன், உதவிப் பொது மேலாளா் அபிஜித் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற வங்கிக் கிளை மேலாளா்கள், அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் லஞ்ச ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அண்ணா சிலை சந்திப்பு வரை நடந்து சென்றனா். இதையடுத்து அங்கு லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.