கோயம்புத்தூர்

இரு வீடுகளில் 30 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் திருட்டு

23rd Oct 2021 05:35 AM

ADVERTISEMENT

கோவையில் இரு வீடுகளில் 30 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, பி.என்.புதூா் அருகேயுள்ள முல்லை நகரைச் சோ்ந்தவா்ஆனந்த் சபேசன் (33). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், குடும்பத்துடன் கும்பகோணத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி சென்றிருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 15.5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸாா் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணா்களை வரவழைத்து சோதனையிட்டனா். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்:

ADVERTISEMENT

சரவணம்பட்டி, விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (62). இவா் பெங்களூருவில் உள்ள தனது மகனின் வீட்டுக்கு அக்டோபா் 1ஆம் தேதி சென்றிருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 14.5 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து விசாரித்து வருகின்றனா்.

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT