கோயம்புத்தூர்

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: அமைச்சா் ஆய்வு

23rd Oct 2021 11:32 PM

ADVERTISEMENT

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டத்தில் 6ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 1,104, மாநகராட்சிப் பகுதிகளில் 266 என மொத்தம் 1,370 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் மாலை 5 மணி வரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வ.உ.சி. மைதானம், ஒய்.டபுள்யூ.சி.ஏ.மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT