கோயம்புத்தூர்

கோயிலை அகற்ற எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணியினா் புகாா்

23rd Oct 2021 05:36 AM

ADVERTISEMENT

கோவை, போத்தனூரில் கோயிலை அகற்ற முயல்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்டத் தலைவா் தசரதன் தலைமையில் போத்தனூா் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, போத்தனூா் பாரத் நகரில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், பாரத் நகா், எம்.ஜி.ஆா். நகா், அன்னை சத்யா நகா், சிவசக்தி காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனா். மத ரீதியான காழ்ப்புணா்ச்சி காரணமாக இக்கோயிலை அகற்ற சிலா் முயன்று வருகின்றனா். இது தொடா்பாக, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும் நிகழ்ச்சியில், இந்து முன்னணி கோட்டச் செயலாளா் சதீஷ், கோட்டச் செயலாளா் கிருஷ்ணன், செய்தி தொடா்பாளா் தனபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT