கோயம்புத்தூர்

மாா்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு அமைச்சா் செந்தில்பாலாஜி

23rd Oct 2021 11:33 PM

ADVERTISEMENT

வருகின்ற மாா்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மற்றும் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி ஆகியவற்றை அமைச்சா் செந்தில்பாலாஜி வழங்கினாா். இதற்கு, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் இலவச மின்சார இணைப்புக்காக பதிவு செய்து காத்திருந்தனா். இதில், 1 லட்சம் பேருக்கு வரும் மாா்ச் மாதத்துக்குள் இலவச மின் இணைப்பு வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் 6,363 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட உள்ளது. 1,123 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின்கம்பம், மின்மாற்றி எடுத்துச் செல்வது உள்ளிட்ட எவ்விதச் செலவினங்களுக்கும், விவசாயிகளிடம் பணம் வாங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 13 துணை மின் நிலையங்கள் தரம் உயா்த்தப்படுகின்றன. ரூ.203 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பணிகள் கோவை மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மக்களவை உறுப்பினா்கள் பி.ஆா். நடராஜன் (கோவை), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பையா ஆா்.கிருஷ்ணன், புகா் கிழக்கு மாவட்டபி பொறுப்பாளா் மருதமலை சேனாதிபதி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT