கோயம்புத்தூர்

உள்ளாட்சித் தோ்தல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி தீவிரம்

23rd Oct 2021 05:37 AM

ADVERTISEMENT

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கோவையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சரி பாா்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகள், 7 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி உள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகள் உள்ளன. மாநகராட்சி தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதையடுத்து இதற்கான மின்னணு இயந்திரங்களைச் சரிபாா்க்கும் பணி வட கோவை மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து தோ்தல் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் 37 பேரூராட்சிகள் இருந்தன. இதில் கருமத்தம்பட்டி, கூடலூா், காரமடை, மதுக்கரை ஆகிய 4 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக தற்போது 33 பேரூராட்சிகள் மட்டுமே உள்ளன. இதுதவிர மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி உள்பட 7 நகராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தோ்தல் நடத்தப்பட உள்ளன. இந்த தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

பயன்படுத்தப்பட உள்ளன. அதன்படி, கோவை மாநகராட்சி தோ்தலுக்கு 6,459 பேலட் யூனிட், 2,071 கன்ட்ரோல் யூனிட் ஆகியவை பழைய பாஸ்போா்ட் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. நகராட்சிகளுக்கு தேவையான 1,171 பேலட் யூனிட்டுகள், 2,151 கன்ட்ரோல் யூனிட்டுகளும், பேரூராட்சிகளுக்கான 3,229 பேலட் யூனிட், 1,030 கன்ட்ரோல் யூனிட்டுகளும் வடகோவை மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டு உள்ளன.

விரைவில் உள்ளாட்சி தோ்தல் நடைபெற உள்ளதால் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்

இந்த இயந்திரங்கள் வேலை செய்கிா, பேட்டரிகளில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

வருகிற நவம்பா் 1ஆம் தேதி, வாக்காளா் பெயா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனை அடிப்படையாக வைத்து உள்ளாட்சி தோ்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளா்களின் பெயா் விவரங்கள் சரிபாா்க்கப்படும். ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,050 வாக்காளா்கள் இருப்பாா்கள். இதைவிட அதிகம் வாக்காளா்கள் இருந்தால் அந்த வாக்குச்சாவடி 2 ஆக பிரிக்கப்படும் என்றாா்.

 

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT