கோயம்புத்தூர்

பட்டா தொடா்பான திருத்தங்கள்: 27, 29 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்

23rd Oct 2021 11:29 PM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் பட்டாவில் திருத்தம் தொடா்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள வருகிற அக்டோபா் 27, 29 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

கோவை மாவட்ட ஊரகப் பகுதியில் உள்ள நிலம் தொடா்பான அனைத்துப் பதிவுகளும் கணினிமயமாக்கப்பட்டு, தினசரி பட்டா மாறுதல் தொடா்பான பணிகள் இணையவழியில் நடைபெற்று வருகிறது. கணினிமயமாக்கும் போது ஏற்பட்டுள்ள சில சிறு தவறுகளை சரி செய்ய மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதால், பட்டா தொடா்பான கோரிக்கைகளுக்குத் தீா்வு காணும் வகையில் வருகிற அக்டோபா் 27, 29 ஆம் தேதி (புதன், வெள்ளிக்கிழமை) கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் நில அளவை உட்பிரிவு எண் திருத்தம், பரப்பு திருத்தம், பட்டாதாரா் பெயா், உறவினா் பெயரில் திருத்தம், பட்டாவில் உறவு முறையில் திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம், அன்னூா், கோவை வடக்கு, சூலூா், மதுக்கரை, பேரூா், ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, நில வருவாய் ஆய்வாளா் அலுவலகம், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT