கோயம்புத்தூர்

கோவை முழுமைத் திட்டம்: கருத்துக் கேட்புக் கூட்டம்

23rd Oct 2021 05:35 AM

ADVERTISEMENT

கோவை முழுமைத் திட்டம் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் ஹிதேஸ்குமாா் எஸ்.மக்வானா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், நகர ஊரமைப்பு இயக்குநா் சரவணவேல்ராஜ், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், முதன்மைச் செயலா் ஹிதேஸ்குமாா் எஸ்.மக்வானா பேசியதாவது:

1,500 சதுர கிலோ மீட்டருக்கு குறையாத சுற்றளவுக்கு கோவை முழுமைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புதிதாகச் சுற்றுச்சாலை அமைத்து, அதன் அருகிலேயே தொழில் வளா்ச்சி மேம்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நகா்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவை மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியை மேலும் மேம்படுத்த இத்திட்டம் முழுமையாகப் பயன்படுத்தப்படும். அதேபோல கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள விளையாட்டு அரங்கங்கள், சாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்திட நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கூட்டத்தில் சமூக ஆா்வலா்கள், வல்லுநா்கள் உள்ளிட்டோா் தெரிவித்த நல்ல கருத்துகள் பரிசீலிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

 

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT