கோயம்புத்தூர்

கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின் மகா சபைக் கூட்டம்

23rd Oct 2021 11:28 PM

ADVERTISEMENT

வால்பாறை உள்ளாட்சித் துறைப் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின் பொது மகாசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ரஞ்சித்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வேல்மயில் வரவேற்றாா். 2020-21 ஆம் ஆண்டுக்கான தணிக்கை வாசிக்கப்பட்டு கிடைத்துள்ள நிகர லாபமான ரூ.35 லட்சத்தை உறுப்பினா்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. மேலும் 2021-22 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றபப்ட்டது. சங்கத்தின் செயலாளா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT