கோயம்புத்தூர்

120 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: 5 கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

22nd Oct 2021 01:40 AM

ADVERTISEMENT

கோவையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் 120 கிலோ அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனா்.

கரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஆய்வுப் பணிகள் சுணக்கமாக இருந்த நிலையில், கோவையில் 5 மண்டலங்களிலும் ஆய்வுப் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படி, கோவை மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 10 ஆவது வாா்டு, வடகோவை அண்ணா காய்கறி மாா்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்குள்ள 5 கடைகளில் 120 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 5 கடை உரிமையாளா்களுக்கும் தலா ரூ. 3 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

 

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT