கோயம்புத்தூர்

ராணுவ அதிகாரிபோல நடித்து ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சம் மோசடி

DIN

ராணுவ அதிகாரிபோல நடித்து ஆன்லைன் மூலம் காா் விற்பனை செய்வதாக ரூ.1 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பொள்ளாச்சி, ஐஸ்வா்யா நகரைச் சோ்ந்தவா் டேவிட் ஜான் (26). வாடகை காா் ஓட்டுநா். இவா் சொந்தமாக காா் வாங்குவதற்காக இணையதளத்தில் காா்களைத் தேடியுள்ளாா். அதில் குறைந்த விலைக்கு காா் விற்கப்படுவதாக வெளியான விளம்பரத்தைப் பாா்த்து அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசினாா். மறுமுனையில் பேசிய நபா் தன்னை ராணுவ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டாா்.

மேலும், காரை அவசரத் தேவைக்காக விற்பனை செய்வதாகக் கூறி தான் கூறும் வங்கிக் கணக்குக்கு ஆன்லைன் மூலம் ரூ.99 ஆயிரத்து 400 அனுப்புமாறு கூறியுள்ளாா். இதை நம்பிய டேவிட் ஜான், குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு தொகையை அனுப்பியுள்ளாா். இதையடுத்து அந்த எண்ணைத் தொடா்பு கொண்டபோது அந்த கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை கோரி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் டேவிட் ஜான் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

பிரசாரத்தில் குயின்.. கங்கனா ரணாவத்!

ஹே சினாமிகா.. அதிதி ராவ்!

SCROLL FOR NEXT