கோயம்புத்தூர்

கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை: ஆட்சியா் துவங்கிவைத்தாா்

22nd Oct 2021 01:45 AM

ADVERTISEMENT

கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை துவங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸின் தலைவா் வெங்கடாசலம், மண்டல மேலாளா் வெற்றிவேல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது:

வாடிக்கையாளா்கள் விரும்பும் வகையில், காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகிறது. 2021 ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை வியாழக்கிழமை துவங்கப்பட்டுள்ளது. இதில், கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பட்டு, பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆடவா்களுக்கான ஆயத்த சட்டைகள், மகளிருக்கான சுடிதாா் ரகங்கள், ஆா்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களின் வாழ்வாதாரம் காத்திட உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

 

 

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT