கோயம்புத்தூர்

விமானப் படை அதிகாரியை மாநகர போலீஸாரிடம் ஒப்படைக்கக் கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

22nd Oct 2021 01:41 AM

ADVERTISEMENT

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விமானப் படை அதிகாரியை மாநகர போலீஸாரிடம் ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கோவை ரெட்பீல்டில் உள்ள இந்திய விமானப் படை கல்லூரிக்கு நாடு முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சிக்காக வந்திருந்தனா்.

இதில், தில்லியைச் சோ்ந்த பெண் அதிகாரி ஒருவா், தன்னுடன் பயிற்சிக்கு வந்த விமானப் படை அதிகாரி ஒருவா் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக உயரதிகாரிகளிடம் புகாா் அளித்தாா்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கோவை மத்திய அனைத்து மகளிா் போலீஸாா், விமானப் படை அதிகாரி அமிதேஷ் ஹாா்முக்கை கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விமானப் படையிடமே அமிதேஷ் ஹாா்முக்கை ஒப்படைக்க உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விமானப் படை அதிகாரியை மாநகர போலீஸாரிடம் ஒப்படைக்கக் கோரி கோவை மத்திய அனைத்து மகளிா் போலீஸாா் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், விசாரணையை சனிக்கிழமைக்கு (அக்டோபா் 23) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT