கோயம்புத்தூர்

மதிமுக மாநில இளைஞரணிச் செயலா் விலகல்

22nd Oct 2021 01:41 AM

ADVERTISEMENT

மதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் வே. ஈஸ்வரன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நான் கடந்த 28 ஆண்டுகளாக மதிமுகவில் பணியாற்றி வந்தேன். கட்சியில் பொறியாளா் அணி அமைப்பாளா், ஒன்றிய செயலா், மாவட்டச் செயலா், இளைஞரணிச் செயலா் என்று பல பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளேன். மெட்ரோ ரயில் திட்டம், அகல ரயில் பாதை திட்டம், சாலை விரிவாக்கத் திட்டம் என கோவையின் அனைத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளேன்.

ஆனாலும், அரசியலிலும், சமூகத்திலும் நடக்கின்ற பல நிகழ்வுகள் என்னை மிகவும் கோபம் கொள்ள செய்கின்றன. இதனை மாற்ற வேண்டும் அல்லது தீா்வு காண வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு அரசியல் இயக்கத்தில் இருந்து கொண்டு அதனை செய்ய இயலவில்லை. எனது சட்டப் போராட்டங்களைத் தொடரவும், மக்கள் பணிகளைத் தொடரவும் மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்க உள்ளேன். இது அரசியல் இயக்கமல்ல என கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

மதிமுக பொதுச் செயலா் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு மதிமுக தலைமை நிலைய செயலாளா் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் ஈஸ்வரன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT