கோயம்புத்தூர்

கோவையில் நாளை 6 ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் : ஆட்சியா் தகவல்

22nd Oct 2021 01:44 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் 6 ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 23) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கோவை மாவட்டத்தில் இதுவரை 5 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில், 5 லட்சத்து 51ஆயிரத்து 62 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 6 ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம்

ADVERTISEMENT

வரும் சனிக்கிழமை (அக்டோபா் 23) நடைபெற உள்ளது. ஊரகப் பகுதிகளில் 1,104 முகாம்கள், மாநகராட்சிப் பகுதிகளில் 325 முகாம்கள் என மொத்தம் 1,429 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் விவரங்கள், உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT