கோயம்புத்தூர்

மாவட்ட அரசு வழக்குரைஞா் பொறுப்பேற்பு

21st Oct 2021 06:25 AM

ADVERTISEMENT

கோவை மாவட்ட அரசு வழக்குரைஞராக (சிவில்) அருள்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் அரசு வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி கோவை மாவட்ட அரசு வழக்குரைஞராக (சிவில்) நியமிக்கப்பட்டுள்ள அருள்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் பையா கவுண்டா், மாவட்ட கவுன்சில் உறுப்பினா் ஆனந்தன், அரசு வழக்குரைஞா்கள் கிருஷ்ணமூா்த்தி, வேடப்பட்டி கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT