கோயம்புத்தூர்

கோயில் நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்ற எதிா்ப்பு: இந்து முன்னணியினா் போராட்டம்

DIN

கோயில்களுக்கு நன்கொடையாக, காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை உருக்கும் தமிழக அரசின் திட்டத்தைக் கண்டித்து இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோயில்களுக்கு நன்கொடையாக, காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் பிரசார யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோவையில் உள்ள கோனியம்மன் கோயிலில் இந்த பிரசார யாத்திரை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுவாமி சிலை முன்பு கோரிக்கை மனு வைத்து இந்து முன்னணியினா் பூஜை செய்தனா்.

இதையடுத்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோயில் நகைகளை உருக்க தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. 50 ஆண்டுகளாக கோயில்களில் உள்ள நகைகள் குறித்த கணக்குகள் இல்லை. இதை விசாரித்தால் காணாமல் போன நகைகள் குறித்த உண்மைகள் வெளியே வரும் என்பதற்காக நகைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. இதைக் கண்டித்து சேலம், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஊா்களில் 7 நாள்கள் இந்தப் பிரசார யாத்திரை போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT