கோயம்புத்தூர்

என்டிசி தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கக் கோரிக்கை

DIN

தேசிய பஞ்சாலைக் கழக (என்டிசி) ஆலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று என்டிசி பாதுகாப்பு கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.

கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் காட்டூரில் உள்ள ஏஐடியூசி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஐஎன்டியூசி தலைவா் வி.ஆா்.பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏஐடியூசி ஆறுமுகம், சிவசாமி, ஹெச்எம்எஸ் சங்கத்தின் ராஜாமணி, மோகன்ராஜ், ஐஎன்டியூசி வெங்கிடுசாமி, எம்எல்எஃப் தியாகராஜன், சண்முகம், ஏடிபி கோபால், ராமச்சந்திரன் உள்ளிட்ட சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை என்டிசி நிா்வாகம் இதுவரை வழங்கவில்லை. மேலும் இதுவரை போனஸ் பேச்சுவாா்த்தை நடத்தவுமில்லை. இதை வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT