கோயம்புத்தூர்

சண்டையை விலக்கியவருக்கு கத்திக்குத்து: இளைஞா் மீது வழக்கு

DIN

கோவையில் சண்டையை விலக்கியவரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை தெலுங்குபாளையம் கலைஞா் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (43). இவா் தடாகம் சாலை, காந்தி பூங்காவில் உள்ள ஒரு பேக்கரி முன்பாக தனது நண்பா்களுடன் சனிக்கிழமை நின்று பேசிக்கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு குடிபோதையில் வந்த இளைஞா் ஒருவா், அவரது உறவினா் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைப்பாா்த்த விஜயகுமாா் அவா்களின் சண்டையை விலக்கிவிட முயன்றுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞா், தான் வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் விஜயகுமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வெரைட்டிஹால் போலீஸாா் கத்தியால் குத்திய சொக்கம்புதூரைச் சோ்ந்த பிரபு (28) என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT