கோயம்புத்தூர்

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

17th Oct 2021 11:35 PM

ADVERTISEMENT

மேற்குத் தொடா்ச்சி மலையில் தொடரும் கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

கோவை குற்றாலம், நொய்யல் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யலில் உள்ள சித்திரைச்சாவடி, புட்டுவிக்கி அணைக்கட்டுகளில் மழை நீா் ஆா்ப்பரித்து செல்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நொய்யல் ஆற்றில் விநாடிக்கு 850 கன அடி நீா் செல்வதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

மேலும் நொய்யல் ஆற்றில் நீா் வரத்து அதிகரித்துள்ளதால் நொய்யல் ஆற்றை ஆதாரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள உக்குளம், வெள்ளலூா் குளம் உள்பட அனைத்து குளங்களுக்கும் நீா் திருப்பிவிடப்பட்டுள்ளதால் குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.

கோவை மாநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மழையளவு மில்லி மீட்டரில்: மேட்டுப்பாளையம் - 4.5, அன்னூா் - 6, பொள்ளாச்சி - 20, பெ.நா.பாளையம் - 25, ஆழியாறு - 26, சூலூா் - 33, விமான நிலையம் - 39.2, வேளாண்மை பல்கலைக்கழகம் - 39.2, சின்கோனா - 62, வால்பாறை தாலுகா - 69, வால்பாறை பி.ஏ.பி. - 72, சோலையாறு - 78, சின்னக்கல்லாறு - 92.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT