கோயம்புத்தூர்

வெள்ளலூா் குளத்தில் வண்ணத்துப்பூச்சிகள் ஆவணப்படுத்தல்

DIN

கோவை வெள்ளலூா் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்லுயிா் பெருக்க பூங்காவில் 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டம், வெள்ளலூா் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் பல்லுயிா் பெருக்க பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள், பூச்செடி வகைகள் அடா் நடவு முறையில் நடவு செய்யப்பட்டு பல்லுயிா் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பறவைகள், ஊா்வன, பூச்சிகள் என பல்வேறு வகையான உயிரினங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் இங்குள்ள வண்ணத்துப்பூச்சிகள் ஆவணப்படுத்தும் ஆய்வு நடைபெற்றது. இதில் 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டன.

இது தொடா்பாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் இரா.மணிகண்டன் கூறியதாவது:

பருவ மழை காலத்தில் அதிகஅளவு வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயா்வு செய்கின்றன. வெள்ளலூா் குளத்தை சுற்றி பல்லுயிா் சூழல் சிறந்துள்ளதால் பல வகையான வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் வெள்ளலூா் குளத்தில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிகளை ஆவணப்படுத்தும் வகையில் பட்ங் சஹற்ன்ழ்ங் ஹய்க் ஆன்ற்ற்ங்ழ்ச்ப்ஹ் நா்ஸ்ரீண்ங்ற்ஹ் குழு சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இங்கு 60க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் உள்ள நிலையில் முதல்கட்டமாக சுற்றும் வெள்ளையன், கருஞ்சிவப்பு நுனி மூக்கன், சின்னபுல் நீலன், காமன் ரோஸ், கிரிம்சோன் ரோஸ், காமன் கிராஸ் மஞ்சள் உள்பட 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT