கோயம்புத்தூர்

கைத்தறி உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

DIN

கோவையில் கைத்தறி உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை, சாய்பாபா காலனி பாரதி பூங்கா பகுதியில் கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது உதவி இயக்குநா் சூா்யாவிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.03 லட்சமும், கூட்டுறவு சங்க எழுத்தா் லியோ என்பவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் என மொத்தம் ரூ.1.83 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனை வியாழக்கிழமை பிற்பகல் வரை தொடா்ந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இருவரிடமும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT