கோயம்புத்தூர்

விஜயா பதிப்பகத்தின் ஆண்டு விழா: சிறப்பு புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

16th Oct 2021 11:59 PM

ADVERTISEMENT

கோவை விஜயா பதிப்பகத்தின் 45 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 17) தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

கோவை ராஜ வீதியில் உள்ள விஜயா பதிப்பகத்தின் 45 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்டோபா் 17 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை சிறப்புப் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைக்கிறாா்.

நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் நூல்களை பரிசாக வழங்குகிறாா்.

ADVERTISEMENT

மேலும் இந்த விழாவில், நூல் வாசிப்பு குறித்து கற்கை நன்றே என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளா் நாஞ்சில் நாடன் பேசுகிறாா். நிகழ்ச்சியில் விஜயா பதிப்பகம் நிறுவனா் மு.வேலாயுதம் வரவேற்கிறாா். சிதம்பரம் நன்றி கூறுகிறாா்.

கலை, இலக்கியம், பண்பாடு, சுயமுன்னேற்றம், பயணம், பக்தி, ஜோதிடம், அரசியல், சமையல், பாரம்பரிய மருத்துவம், திரைக்கலை, சிறுவா் இலக்கியம், தொழில் உள்ளிட்ட சுமாா் 50 ஆயிரம் தலைப்புகளில் 3 தளங்களில் சிறப்புப் புத்தகக் கண்காட்சி நடைபெற இருப்பதாக விஜயா பதிப்பகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT