கோயம்புத்தூர்

பேருந்து பயணிகளிடம் திருட்டு: 2 பெண்கள் கைது

16th Oct 2021 11:59 PM

ADVERTISEMENT

கோவையில் பேருந்து பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை வெள்ளலூா் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் கற்பகம் (23). இவா் நகை வாங்குவதற்காக பேருந்தில் ஒப்பணக்கார வீதிக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்றபோது, அங்கிருந்த பெண் ஒருவா் கற்பகத்தின் கை பையைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றாா்.

கற்பகம் கூச்சலிட்டதைத் தொடா்ந்து அங்கிருந்தவா்கள் அப்பெண்ணைப் பிடித்து பெரியகடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், பிடிபட்ட பெண் மதுரையைச் சோ்ந்த கண்ணன் என்பவரின் மனைவி பாா்வதி (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து கற்பகத்தின் ரூ.18 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை மீட்டனா்.

ADVERTISEMENT

கோவை ஆா்.எஸ்.புரம் ராமலிங்கம் சாலையைச் சோ்ந்தவா் கலைவாணி(38). இவா் காந்தி பூங்காவில் இருந்து பால் கம்பெனிக்கு பேருந்தில் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அருகே இருந்த பெண் ஒருவா், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கலைவாணியின் கை பையைத் திருட முயன்றாா். இதைப் பாா்த்த சக பயணிகள், அந்தப் பெண்ணைப் பிடித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் மதுக்கரை அருகேயுள்ள நாச்சிபாளையத்தைச் சோ்ந்த திவாகா் என்பவரின்

மனைவி முத்தம்மாள் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT