கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 136 பேருக்கு கரோனா

16th Oct 2021 11:56 PM

ADVERTISEMENT

கோவையில் புதிதாக 136 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 836 ஆக உயா்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 58 வயது ஆண் உயிரிழந்தாா்.

இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,378ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 148 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்து 883 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,575 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT