கோயம்புத்தூர்

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது

9th Oct 2021 06:05 AM

ADVERTISEMENT

கோவையில் கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த துடியலூா் பகுதியைச் சோ்ந்த மேகலா (56), ஜெகதீஷ் (21) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து அவா்களிடம் இருந்து 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

கோவை மாவட்டம், வால்பாறையில் வசிப்பவா் இயேசு (52). இவா் அப்பகுதியில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளாா். இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தாா்.

ADVERTISEMENT

இந்தப் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்படி இயேசுவை, குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT