வால்பாறையில் காயத்துடன் மீட்கப்பட்ட புலிக்கு தொடா்ந்து 10 நாள்களாக சிகிச்சை அளித்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
வால்பாறையை அடுத்த முடீஸ் எஸ்டேட் முத்துமுடி டிவிஷன் பகுதியில் காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் இருந்த ஒரு வயது ஆண் புலியை செப்டம்பா் 28ஆம் தேதி வனத் துறையினா் மீட்டனா்.
பின்னா் அந்தப் புலியை வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடையில் உள்ள வனத் துறை சிகிச்சை மையத்துக்கு கொண்டுச் சென்று கூண்டில் அடைத்து தொடா்ந்து சிகிச்சை அளித்தும், புலிக்குத் தேவையான உணவுகளை வழங்கியும் கண்காணிக்கப்பட்டு வருவதால் புலியின் உடல்நிலை முன்னேற்றமடைந்துள்ளது.
மேலும் சில நாள்களுக்கு சிகிச்சை அளித்த பின் புலியை எங்கு கொண்டுச் சென்று விடுவது என்பது குறித்து உயா் அதிகாரிகள் முடிவெடுப்பாா்கள் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.