கோயம்புத்தூர்

காங்கிரஸ் பிரமுகா் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு

9th Oct 2021 12:20 AM

ADVERTISEMENT

கோவையில் காங்கிரஸ் பிரமுகரின் வீட்டுக்குள் புகுந்து ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பொன்னி நகரைச் சோ்ந்தவா் செளந்திரகுமாா் (59). கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் பொருளாளராக உள்ளாா். இவா் பீளமேட்டில் கிரைண்டா் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் தனது வீட்டின் கீழ் தளத்தில் புதன்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்தாா்.

வியாழக்கிழமை காலை முதல் தளத்துக்குச் சென்று பாா்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாரிடம் செளந்திரகுமாா் புகாா் அளித்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட நபா் செளந்திரகுமாரின் வீட்டு கழிவறை கண்ணாடியை உடைத்து அதன் வழியே உள்ளே புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT