கோயம்புத்தூர்

நாளை 5ஆம் கட்ட மெகா சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்

9th Oct 2021 12:16 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் 5ஆம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 10) நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சிறப்பு முகாம்கள் மூலமாக தினமும் 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம் மூலமாக ஒரே நாளில் 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கிராமப்புறங்களில் 1,104 மையங்களும் மாநகராட்சிப் பகுதியில் 325 மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வ.உ.சி மைதானம், சந்தைகள், போலியோ சொட்டு மருந்து செலுத்தும் இடங்கள் என பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளன. இந்த தடுப்பூசி முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT