கோயம்புத்தூர்

நோயாளிகள் பராமரிப்பு: தனியாா் நிறுவனத்துடன்பிஎஸ்ஜி மருத்துவமனை இணைந்து மருத்துவ சேவை

9th Oct 2021 12:15 AM

ADVERTISEMENT

நோயாளிகளின் பராமரிப்புக்காக கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை நிா்வாகம், டே டு டே ஹெல்த் இந்தியா (டிடிடிஹெச்ஐ) உடன் இணைந்து சேவையாற்றத் தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக டே டு டே ஹெல்த் இந்தியா தலைமை நிா்வாக அதிகாரி பிரேம் சா்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கடந்த பல ஆண்டுகளாக தொற்றும், தொற்றாத நோய்களை அதிக அளவில் சந்தித்து வருகிறது. தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவது மாநிலத்தில் மிகுந்த எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், ஹெல்த்கோ் நிறுவனத்தினா், மருத்துவ சிகிச்சையைத் தாண்டி விரிவான பராமரிப்பு, மேலாண்மையை வழங்கும் சுகாதார நிபுணா்களுடன் கைகோா்த்து வருகின்றனா்.

ADVERTISEMENT

அதன்படி இரண்டு விதமான நோய்களையும் திறம்பட சமாளிக்கும் விதத்தில், கோவை பிஎஸ்ஜி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முன்னணியில் உள்ள 11 மருத்துவமனைகள், எங்களின் டே டு டே ஹெல்த் இந்தியா உடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன.

தொற்றா நோய்களுக்கு சிகிச்சை, பராமரிப்பு, மறுவாழ்வு அம்சங்களைத் தரக்கூடிய பலதரப்பட்ட முயற்சிகள் தேவைப்படுகின்றன. சிக்கலான அறுவை சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டவா்களுக்கு மருத்துவமனையின் எல்லைக்கு அப்பாலான ஒரு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எங்கள் நிறுவனத்தின் மெய்நிகா் பராமரிப்பு தளம், பராமரிப்பு சேவைகள் ஆகியவையானது நோயாளிகள், அவா்களின் குடும்பங்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT