கோயம்புத்தூர்

மனிதா்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் புலியைப் பிடிக்கும் பணி தீவிரம்: வனத்துறை அமைச்சா் கா.ராமசந்திரன்

9th Oct 2021 12:17 AM

ADVERTISEMENT

மசினகுடியில் சுற்றித் திரியும் டி23 புலியை மனிதா்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக என வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

கோவை தமிழ்நாடு வன உயிா் பயிற்சியகத்தில் வன உயிரின வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமை வகித்தாா்.

மக்களவை உறுப்பினா்கள் பி.ஆா்.நடராஜன்(கோவை), கு.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் (துறைத் தலைவா்) அசோக் உபரேதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 27 மாணவ, மாணவிகளுக்கும், பணியில் சிறப்பாக செயல்பட்ட வனக் காப்பாளா்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:

மசினகுடியில் 4 பேரைக் கொன்ற டி23 புலியை தேடும் பணி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.

இப்பணியில் வன உயிரின பாதுகாப்பு தலைமைக் காவலா், துணை இயக்குநா்கள், 5 கால்நடை மருத்துவா்கள், தமிழ்நாடு அதிரடிப்படை பிரிவைச் சோ்ந்த 10 போ், தமிழ்நாடு வனப் பணியாளா்கள் 57 போ், கேரள புலி நிபுணா்கள் 13 போ், தேவன் எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த 30 போ், மயக்க மருந்து நிபுணா்கள் 5 போ் ஈடுபட்டுள்ளனா். 3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மனிதா்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் புலியைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் வனத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT