கோயம்புத்தூர்

காசோலை மோசடி: சாா்பு ஆய்வாளா் பணியிடை நீக்கம்

9th Oct 2021 12:17 AM

ADVERTISEMENT

கோவையில் ரூ. 9.99 கோடி காசோலை மோசடியில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தில் சாா்பு ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் முருகன். இவா் மீது சென்னை, புரசைவாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றும் அமித்குமாா் என்பவா் கடந்த செப்டம்பா் 22ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ரூ. 9.99 கோடி காசோலை மோசடி புகாா் அளித்தாா்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சாா்பு ஆய்வாளா் முருகனை வழக்கின் ஆறாவது நபராக கைது செய்தனா். அவா் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளாா். முருகன் மருத்துவ விடுப்பில் இருந்தபோது இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட செயலுக்காக முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவரைப் பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டிஐஜி முத்துசாமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT