கோவையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்பட 14 மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோயில்களை அனைத்து நாள்களிலும் திறக்க வலியுறுத்தி பாஜகவினா் தமிழகம் முழுவதும் கோயில்கள் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா். கோவை- அவிநாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மகளிரணி தேசிய தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கோவை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் நந்தகுமாா், மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், மாநில பொதுச்செயலா் ஜி.கே.செல்வகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி வானதி சீனிவாசன் உள்பட ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 போ் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.