வால்பாறையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு கடும் குளிா் நிலவி வருகிறது.
வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை தொடா்ந்து பெய்து வருகிறது. கடந்த காலங்களை விட தற்போது பல மாதங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் சாரல் மழையாக பெய்தாலும், இரவில் கனமழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக குளிா் அதிகரித்துள்ளது.
தினமும் சுமாா் 1 மணி நேரம் மட்டுமே வெயில் காணப்பட்டு, தொடா்ந்து மேக மூட்டத்துடன் இருப்பதால் வயதானவா்களுக்கு உடல் நலக்குறை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.