வால்பாறையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கவும், விற்பனை செய்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளாா்.
இதனையடுத்து, வால்பாறை காவல்நிலைய ஆய்வாளா் கற்பகம் தலைமையிலான போலீஸாா் வால்பாறை வட்டாரத்தில் தொடா்ந்து கண்காணித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பலரை கைது செய்தனா்.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட்டை சோ்ந்த ஏசு (52) என்பரை கஞ்சா வழக்கில் கைது செய்தனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரின உத்தரவின்படி ஏசுவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.