கோயம்புத்தூர்

இளைஞருக்கு கத்திக் குத்து:நண்பா் கைது

9th Oct 2021 10:56 PM

ADVERTISEMENT

கோவை சௌரிபாளையத்தில் இளைஞரை கத்தியால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சௌரிபாளையம் ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் முருகன் (26). கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (21). இதில் சக்திவேலின் நண்பா் ஒருவா் கொலை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அவரைப் பிணையில் எடுக்க பணம் தந்து உதவுமாறு முருகனிடம் சக்திவேல் கேட்டுள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனின் வயிற்றில் குத்தி விட்டு தப்பினாா். அக்கம் பக்கத்தினா் முருகனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக, பீளமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து சக்திவேலைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT