கோயம்புத்தூர்

பொதுத்துறைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்: எம்.பி., பி.ஆா்.நடராஜன்

3rd Oct 2021 11:50 PM

ADVERTISEMENT

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு அரசு விற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இதனை பாதுகாக்கும் போராட்டத்தில் இளைஞா்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தெரிவித்தாா்.

கோவை, இருகூா் கிளை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் விளையாட்டுக் கழகம் சாா்பில் கிரிக்கெட் வலைப் பயிற்சி மையத்தின் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனை கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் திறந்துவைத்து பேசியதாவது: உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க விளையாட்டு மிக முக்கியமானது. நமது நாட்டில் கிரிக்கெட் மீதான மோகம் இளைஞா்களை வெகுவாக ஈா்த்துள்ளது.

இளைஞா்களுக்கு முறையான பயிற்சி அளித்து அவா்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் திறமையை உருவாக்க வேண்டும்.

ADVERTISEMENT

நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டின் மூலம் ஏராளமான இளைஞா்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனா்.

இந்நிலையில், தற்போது மத்திய அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்றுவிடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது. மக்களின் வரிப் பணம், உழைப்பில் உருவான பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பதை அனுமதிக்க கூடாது. பொதுத் துறை நிறுவனங்கள் இருந்தால் தான் விளையாட்டுத் துறை உள்பட ஒதுக்கீட்டின் மூலம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இத்தகைய பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்கும்

போராட்டத்தில் இளைஞா்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் இருகூா் கிளைச் செயலாளா் பிரேம்குமாா், கோவை மாவட்ட கிரிக்கெட் பயிற்சி மையத்தின் துணைச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT