கோவையில் 4 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 81 ஆயிரத்து 454 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 4 ஆம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் 557 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 63 ஆயிரத்து 675 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 17 ஆயிரத்து 779 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் என மொத்தம் 81 ஆயிரத்து 454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும், 31 ஆயிரத்து 871 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 49 ஆயிரத்து 583 போ் 2 ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.