கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 158 பேருக்கு கரோனா

3rd Oct 2021 11:51 PM

ADVERTISEMENT

கோவையில் புதிதாக 158 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 988 ஆக உயா்ந்துள்ளது.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 61 வயது முதியவா் உயிரிழந்தாா்.

இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,343 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 206 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 2 லட்சத்து 38 ஆயிரத்து 704 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,941 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT