கோயம்புத்தூர்

மழை நீா் வடிகால்களில் தூய்மைப் பணி

3rd Oct 2021 11:48 PM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில், 10 நாள்களில் 275.57 கிலோ மீட்டா் நீளத்துக்கு மழை நீா் வடிகால்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழைநீா் செல்லும் வடிகால் கால்வாய்களில் அடைப்புகள், குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் கால்வாய்களைத் தூா்வார தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் செப்டம்பா் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெற்ற தூய்மைப் பணியில் 185.06 கிலோ மீட்டரும், செப்டம்பா் 28 ஆம் தேதி முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற்ற தூய்மைப் பணியில் 90.51 கிலோ மீட்டரும் என மொத்தம் 10 நாள்களில் 275.57 கிலோ மீட்டா் நீளத்துக்கு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT