கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி சாா்பில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பயணம்

3rd Oct 2021 11:51 PM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி சாா்பில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பொலிவுறு நகரம் ( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் மோட்டாா் வாகனம் அல்லாத போக்குவரத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக மிதிவண்டிப் பயணம் (சைக்கிளத்தான்) நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து, மிதிவண்டி பயணத்தை தொடங்கிவைத்தாா்.

இந்த பயணமானது ஆா்.எஸ். புரம் டி.பி. சாலை தபால் அலுவலகம் அருகில் தொடங்கி புரூக்பீல்டு சாலை, பந்தயசாலை, வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம் வழியாகச் சென்று, மீண்டும் ஆா்.எஸ். புரம் வந்தடைந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, மிதிவண்டிப் பயணத்தில் கலந்துகொண்ட 200 பேருக்கு மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், பொலிவுறு நகரம் திட்ட இயக்குநா் ராஜ்குமாா், உதவி செயற்பொறியாளா்கள் ஹேமலதா, பிரபாகரன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT